குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு ஆண்மை நீக்கம்!! மடகாஸ்கரில் அமுலாகவுள்ள சட்டம்
குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை கெமிக்கல் காஸ்ட்ரேஷன் (ஒரு வகை ஆண்மை நீக்கம்) செய்யும் மசோதாவை மடகாஸ்கர் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
ஜனாதிபதி ஆண்ட்ரே ரஜோலினா கையெழுத்திட்ட பிறகு இந்த மசோதா சட்டமாகும். சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் அறுவை சிகிச்சை மூலம் காஸ்ட்ரேஷன் செய்யப்படலாம் என்று மசோதா குறிப்பிடுகிறது.
இந்த மசோதாவுக்கு எதிராக சில மனித உரிமை அமைப்புகள் முன் வந்துள்ளன. ஆனால் நாட்டில் தொடரும் சித்திரவதைகளை தடுத்து நிறுத்த சட்டம் அவசியம் என ஒரு பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு நாட்டில் 600 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 133 வழக்குகள் பதிவாகியுள்ளன.
(Visited 6 times, 1 visits today)