கணவனைக் கொல்பவர்களுக்கு ரொக்க பரிசு – வாட்ஸ்அப் கணக்கில் பதிவிட்ட மனைவி
கணவனை கொலை செய்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக வாட்ஸ்அப் கணக்கில் பதிவிட்ட பெண் மீது இந்திய பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் ஆக்ராவின் பா மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு எதிராக இந்திய பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
50,000 இந்திய ரூபாய் பரிசு வழங்குவதாக இந்த பெண் தனது வாட்ஸ்அப் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
தன்னைக் கொலை செய்பவருக்கு ரொக்கப் பரிசு தருவதாக மனைவியின் வாட்ஸ்அப் கணக்கில் வெளியான செய்திகளைப் பார்த்த பெண்ணின் கணவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், தனது மனைவியின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தன்னை பல சந்தர்ப்பங்களில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இந்த நபர் ஜூலை 9, 2022 அன்று சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் குடும்பத் தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக மோதல்கள் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு 2022 டிசம்பரில் மனைவி தன்னை விட்டு பிரிந்து பெற்றோருடன் சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது மனைவிக்கு திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்ததால், தனது திருமண வாழ்க்கையில் தகராறு ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அந்த நபர் தன்னை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.