பஞ்சாப்பில் ரப்பர் பாட்ஷா மீது வழக்கு பதிவு

‘வெல்வெட் ஃப்ளோ’ என்ற புதிய பாடலில் கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, ராப்பர் பாட்ஷா மீது பஞ்சாப் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
உலகளாவிய கிறிஸ்தவ நடவடிக்கைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இமானுவல் மாசி அளித்த புகாரைத் தொடர்ந்து, படாலாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாட்ஷா தனது புதிய பாடலான ‘வெல்வெட் ஃப்ளோ’வில் ‘சர்ச்’ மற்றும் ‘பைபிள்’ என்ற வார்த்தைகளை ஆட்சேபனைக்குரிய வகையில் பயன்படுத்தியதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக பாட்ஷா மீது கிலா லால் சிங் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய அதிகாரி குர்விந்தர் சிங் தெரிவித்தார்.