வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு!

ஜப்பானின் கட்டட தூய்மைப்படுத்தல் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.
இதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் ஜப்பான் கட்டடத் சுத்தப்படுத்தல் பணியாளர்கள் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாய்ப்புகளை இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கியமைக்காக ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டின் நீதியமைச்சருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் அமைச்சரால் தெரிவிக்கபப்ட்டது.
(Visited 47 times, 1 visits today)