ஜெர்மனியில் மொழி கற்றால் வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு
ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜெர்மனியில் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில், தொழில்நுட்பம், தாதி மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வெளிநாட்டவர்களுக்கு அதிக விசா வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜெர்மனி பொருளாதார நிறுவனம் கூறுவதன்படி, நாடுமுழுவதும் 5,70,000 பணியிடங்கள் உள்ளன.
“இந்த ஸ்டேட்டர்ஜிக் கூட்டணியில் திறன் சார் தொழிலாளர்களின் இடப்பெயர்வு முக்கியமானது. IT பொறியாளர்கள் முதல் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் வரை பல துறைகளில் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
ஜெர்மனியின் புதிய இடப்பெயர்வு கொள்கைகள், தொழில் வல்லுநர்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்குவது மட்டுமல்லாமல் அதிக சம்பளமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஜெர்மனியில் பணியாற்றும் ஆசிய தொழில்வல்லுநர்களுக்கான சராசரி மாத ஊதியம் 5,400 யூரோக்களாகும்.