Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் 100,000 டொலர் மதிப்புள்ள கார் மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள வீட்டில் இருந்து 100,000 டொலர் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அண்மையில் இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து கார் உள்ளிட்ட பொருட்களை திருடிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் டோவெட்டனில் உள்ள ஹாக்கி தெருவில் உள்ள வீட்டிற்குள் அந்த நபர் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் இருந்த பணம், நகை, கார் சாவி உள்ளிட்ட பல பொருட்களை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் குற்றவாளி சுமார் 100,000 டொலர் பெறுமதியான காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 5.28 மணியளவில் சந்தேகநபர் பெட்ரோல் திருடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நபர் ஆப்பிரிக்க தோற்றத்தில் கறுப்பு ஆடை அணிந்திருப்பவர் என துப்பறியும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் அல்லது கேமரா காட்சிகள் இருப்பவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version