இஸ்ரேலில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மீது மோதிய கார் : 13 பேர் படுகாயம்!

இஸ்ரேலில் உள்ள கர்கூர் சந்திப்பில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் கார் ஒன்று அங்கிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 13 பேர் படுகாயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஜெனின் பகுதியைச் சேர்ந்த 53 வயது பாலஸ்தீனியர், எனவும் அவர் இஸ்ரேலியர் ஒருவரை திருமணம் செய்த நிலையில் அங்கு சட்டவிரோதமாக வசித்து வந்ததாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவர் வாகனத்தை விட்டு வெளியேறி, கூர்மையான பொருளால் போலீசார் மீது தாக்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவருடைய நிலை தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)