ரஷ்யாவில் கார் குண்டு வெடிப்பு – ஜெனரல் ஒருவர் பலி!
ரஷ்ய ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) இன்று கார் குண்டுவெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) ரஷ்ய ஆயுதப்படைகளின் பயிற்சி இயக்குநரகத்தின் தலைவராக பணியாற்றி வந்தவராவார்.
இந்த சம்பவம் இன்று காலை 07.00 மணியளவில் மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது.
உக்ரைனிய உளவுத்துறைகள் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய புலனாய்வாளர்கள் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.





