சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025) மாபெரும் சாதனை படைத்து அசத்தியுள்ளார். அது என்ன சாதனை என்றால், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டன் என்கிற வரலாறு சாதனை தான். இந்த அரிய சாதனையை முன்பு டான் பிராட்மன் (1938), கேரி சோபர்ஸ் (1966) மற்றும் முகமது அசாருதீன் (1990) போன்ற புகழ்பெற்ற வீரர்கள் மட்டுமே செய்துள்ளனர்.
25 வயதான கில், ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்டில் 147 ரன்களும், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் 114 ரன்கள் (நாட் அவுட்) எடுத்து, இந்திய அணியை 310/5 என்ற வலுவான நிலைக்கு உயர்த்தினார்.முதல் முறையாக டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கில், இந்த இரண்டு சதங்களால் கிரிக்கெட் உலகில் பெரும் பாராட்டைப் பெற்றார். எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி 211/5 என்று தடுமாறியபோது, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் (87 ரன்கள்) 66 ரன்களும், ரவீந்திர ஜடேஜாவுடன் (41* ரன்கள்) 99 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை மீட்டார். இதனால், முதல் நாள் முடிவில் இந்தியா மிக நல்ல நிலையில் உள்ளது.
மேலும், அதே சமயம், கில் இந்த சதங்களால் பல சாதனைகளை எட்டினார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சதம் அடித்த நான்காவது இந்திய வீரராக, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் மற்றும் விராட் கோலியுடன் இணைந்தார். மேலும், எட்ஜ்பாஸ்டனில் சதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டனாகவும் (விராட் கோலிக்கு பிறகு), அங்கு 50 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது கேப்டனாகவும் (தோனிக்கு பிறகு) பதிவானார்.
இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த அசாருதீன், வெங்கசர்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருடனும் கில் இணைந்தார். இந்த சாதனைகள் மட்டுமின்றி. இந்தத் தொடரில் கில் 2,000 டெஸ்ட் ரன்களை கடந்தார், இதை விராட் கோலி 2014ல் தனது கேப்டன்சி அறிமுகத்தில் செய்திருந்தார். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களில் சதம் அடித்த மூன்றாவது இந்திய கேப்டனாகவும் கில் சாதனை படைத்தார்.
இந்த இன்னிங்ஸ் கில்லின் திறமையை மட்டுமல்ல, அழுத்தமான சூழலில் அணியை வழிநடத்தும் அவரது திறனையும் காட்டியது. 95/2 என்ற நிலையில் களமிறங்கிய கில், அணியின் தேவையை உணர்ந்து, பொறுப்பாக ஆடி இந்தியாவை பலப்படுத்தினார். அவர் எப்படி இந்த தொடரில் விளையாடப்போகிறார் என்கிற விமர்சனம் கலந்த கேள்விகள் ஒரு பக்கம் எழுந்த நிலையில், அதற்கு அவர் தன்னுடைய பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.