ஃபேஸ்புக் மீது கோபம் கொண்டுள்ள கனேடிய பிரதமர் ட்ரூடோ
கனடாவின் வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் கொலம்பியாவில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், சமூக ஊடக தளமான ஃபேஸ்புக் செய்தி உள்ளடக்கத்தை தொடர்ந்து தடுப்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துள்ளார்.
ஃபேஸ்புக் “மக்களின் பாதுகாப்பை விட கார்ப்பரேட் லாபத்தை முன்னிறுத்துகிறது” என்றும் இதனால் தான் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறியுள்ளார்.
“ஃபேஸ்புக் போன்ற ஒரு நிறுவனம் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு கனேடியர்களின் புதுப்பித்த தகவல்களைப் பெறுவதற்கும், கனேடியர்கள் அதிக நேரத்தை செலவிடும் சமூக ஊடக தளமான ஃபேஸ்புக் மூலம் கனேடியர்களை சென்றடைவதற்கும் திறனைக் கொண்டுள்ளது” என்று கனேடிய பிரதமர் கூறினார்.
ஆனால் இதுபோன்ற விஷயங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதை விட கார்ப்பரேட் லாபத்தை வைத்து பேஸ்புக் போன்ற நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது நினைத்துப் பார்க்க முடியாதது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
கனேடிய அதிகாரிகளின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்த வார இறுதியில் இருந்து வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் கொலம்பியா முழுவதும் சுமார் 60,000 பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.