ஹீட்ரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கனடியர்?

கனடாவின் பிரஜை ஒருவரை தீவிரவாத சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
28 வயதான குறித்த கனடியரை ஹீட்ரு விமான நிலையத்தில் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் இருந்து புறப்பட்டு ஹீத்ரூ விமான நிலையத்தை அடைந்த நிலையில் சந்தேக நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் இந்த நபருக்கு தொடர்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எந்த தீவிரவாத அமைப்பின் அமைப்புடன் தொடர்புபட்டவர் என்பது பற்றியோ அல்லது சந்தேக நபரின் ஆள் அடையாள விபரங்களும் வெளியிடப்படவில்லை.
(Visited 14 times, 1 visits today)