கனடாவில் ஜூன் மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சி
கனடாவில் ஜூன் மாதத்தில் பணவீக்க விகிதம் 2.7 சதவீதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட மெதுவான வளர்ச்சியால் இந்த குறைவு பதிவாகியுள்ளது.
கடந்த மே மாதத்தில், பணவீக்கம் 2.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.
கனடிய மத்திய வங்கி தனது அடுத்த வட்டி விகித முடிவை அடுத்த வாரம் புதன்கிழமை (24) அறிவிக்க முன்னர் வெளியாகும் இறுதி பணவீக்க தரவுகள் இதுவாகும்.
இந்த மாத ஆரம்பத்தில், மத்திய வங்கி அதன் வட்டி விகிதக் குறைப்பை ஆரம்பித்தது. மத்திய வங்கி வட்டி விகிதத்தை கால் புள்ளியாக குறைத்து 4.75 சதவீதமாக்கியது.
இந்த நிலையில் அடுத்த வாரம் மத்திய வங்கி மற்றொரு வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.