கனடாவில் புதிய சபாநாயகர் தெரிவு
கனடாவில் இன்றைய தினம் சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
கனடிய நாடாளுமன்றில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கனடிய வரலாற்றில் மூன்றாவது தடவையாக சபாநாயகர் ஒருவர் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாத சந்தர்ப்பம் இது என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கனடாவில் சபாநாயகராக கடமை ஆற்றி வந்த அந்தனி ரோட்டா தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
கடந்த இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற நாசி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் கௌரவிக்கப்பட்டிருந்தார்.நாடாளுமன்றில் கௌரவிப்பு நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்த சம்பவத்திற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரி இருந்தார்.அந்தனி ரோட்டா இதனைத் தொடர்ந்து பதவி விலகியிருந்தார்.இந்த வெற்றிடத்திற்காக இன்றைய தினம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.