WeChatஐ தடைசெய்தது கனடா!! சீனா கடும் அதிருப்தி
சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றி, சீன நிறுவனங்களுக்கு நியாயமான மற்றும் மாறாத வணிகச் சூழலை வழங்குமாறு கனடாவை சீனா கேட்டுக்கொள்கிறது.
நேற்று (31) இடம்பெற்ற வழமையான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் WeChat செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என கனடா கடந்த 30ஆம் திகதி அறிவித்தது.
வாங் வென்பின் அதனை கடுமையாக எதிர்த்ததோடு மேற்கண்ட கருத்துக்களையும் தெரிவித்தார். WeChat என்பது ஒரு தனியார் நிறுவனத்தின் சமூக ஊடக தளமாகும்.
எந்த ஆதாரமும் இல்லாமல் டிஜிட்டல் பாதுகாப்பு என்ற போர்வையில் கனேடிய அரசாங்கம் WeChat ஐ தடை செய்யும் செயலை சீனா கடுமையாக எதிர்க்கிறது என்றும் வாங் வென்பின் கூறினார்.