இலங்கை

முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு அழைப்பு – தேசிய மக்கள் சக்தியின் நுகேகொடை கூட்டத்தில் எதிர்பார்ப்பு

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கூட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு களமிறங்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் பங்கேற்றாலும், அக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தச் சூழ்நிலையிலேயே, கூட்டத்தில் உரையாற்றாவிட்டாலும், வந்து அமர்ந்திருக்குமாறு இவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

நுகேகொடைக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காத நிலையில், அக்கூட்டத்தின் முக்கியத்துவம் குறையக்கூடாது என்பதற்காகவே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், மேற்படி தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

 

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!