தென்கொரியாவில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான பேருந்துகள் – 80 பேர் காயம்!

தென் கொரியாவில் இன்று (16.06) சியோலின் கிழக்கே உள்ள நெடுஞ்சாலையில் மூன்று பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மாணவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பள்ளி பேருந்துகளில் 75 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது.
ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடந்ததாக கங்வான் மாநில தீயணைப்புத் தலைமையகத்தின் அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காயங்களுடன் மீட்டனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 11 times, 1 visits today)