தென் ஆப்பிரிக்காவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேரூந்துகள் ; 77 பேர் படுகாயம்

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் முன்பு வந்தபோது எதிரே வந்த மற்றொரு பஸ் இதன்மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 77 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
(Visited 11 times, 1 visits today)