மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 08 பேர் பலி!
மெக்சிகோவில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஏறக்குறைய 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலையின் வளைவுகள் உள்ள பகுதியில் தடுப்பொன்றில் மோதிய பேருந்து பின்னர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்களின் சொந்த இருப்பிடங்களுக்கு பயணித்த பலர் குறித்த பேருந்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



