ஆப்பிரிக்கா

நைஜீரியாவின் பாலத்தில் இருந்து கவிழந்த பேருந்து : 22 பேர் பலி!

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவில் ஒரு பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மற்றும் பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் மாநில ஆளுநர் கூறினார்.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கடந்த வாரத்தில் தெற்கு மாநிலமான ஓகுனில் நடந்த நைஜீரிய தேசிய விளையாட்டு விழாவில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

போட்டிகள் நிறைவடைந்து வீடு திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து தலைகீழாக விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் இருந்து தப்பியவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு