Site icon Tamil News

பற்றி எரியும் பிரான்ஸ் : ஒரே இரவில் 150 பேர் கைது!

பிரான்ஸில் 17 வயதான இளைஞர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது நாளாக பிரான்சில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (29.06) அமைச்சரவை நெருக்கடிக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்ட டர்மனின் “தாங்க முடியாத வன்முறை வெடித்துள்ளதாகவும், டவுன்ஹால்கள், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version