அமெரிக்காவில் ஆபத்தாக மாறிய பர்கர் – பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் McDonald’s உணவகங்களின் Quarter Pounder பர்கர் ஆபத்தாக மாறியதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் பர்கரில் பயன்படுத்தப்பட்ட இறைச்சியில் E.coli பாக்டீரியா இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் உள்ள உணவகங்களில் Quarter Pounder பர்கரைச் சாப்பிட்ட சுமார் 75 பேர் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பர்கரின் மாட்டு இறைச்சியிலோ வெங்காயத் துண்டுகளிலோ E.coli பாக்டீரியா இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது. அமெரிக்காவில் McDonald’s உணவகத்தின் 20 சதவீத கடைகளில் Quarter Pounder பர்கரின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கொலராடோ மாநிலத்தின் வெளாண்துறை நடத்திய பரிசோதனையில் McDonald’s இறைச்சியில் e.coli இல்லை என்று கண்டறியப்பட்டது.
எனவே இவ்வாரம் முதல் உணவகங்களில் Quarter Pounder விற்கப்படுமென McDonald’s கூறியது. E.coli பாக்டீரியா பரவக் காரணம் என்று சந்தேகிக்கப்படும் வெங்காயத் துண்டுகளைப் பயன்படுத்தப் போவதில்லை என கூறப்படுகின்றது.