ஸ்பெயினல் கோலாகலமாக இடம்பெற்ற காளை திருவிழா : இளைஞர் ஒருவர் பலி!

ஸ்பெயினில் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் காளை ஓட்டும் திருவிழாவில் இருபது வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஸ்பெயினின் காஸ்டில்லே-லா மஞ்சாவில் உள்ள குவாடலஜாரா மாகாணத்தில் எல் காசார் என்ற இடத்தில் இந்த திருவிழா இடம்பெற்றுள்ளது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில் பெயர் குறிப்பிடப்படாத 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காளை தாக்குதலில் பலியானதாக கூறப்படுகிறது.
இந்த திருவிழாவில் சுமார் 1200 காளைகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)