2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில்
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்டத்தை தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.





