வரவு – செலவுத் திட்டம்!! நம்பிக்கை இல்லை என்கிறான் சாணக்கியன் எம்.பி
வரவு – செலவுத் திட்டம் ஊடாக நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என நம்பமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் இன்று முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம் எனவும் சூளுரைத்திருந்தது.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமையவே அரசாங்கம் செயற்படுகின்றது.” எனவும் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சர்வதேச நாணய நிதியம் காட்டும் வழியில் பயணிப்பதால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
அரசாங்கத்தின் போதை ஒழிப்பு நடவடிக்கைக்கு நாம் ஆதரவளிப்போம்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கணவர் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார்.
இப்படியான சம்பவங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்.” – என சாணக்கியன் மேலும் குறிப்பிட்டார்.





