பௌத்த விகாரைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்பு
வத்தேகம அல்கடுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த விகாரைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர சிகிச்சை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வத்தேகம பொலிஸார் சிசுவை கண்டுபிடித்துள்ளனர்.
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குழந்தையின் தாய் மற்றும் தந்தையை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்
(Visited 53 times, 1 visits today)





