மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் நடத்திய கொடூர தாக்குதல்
மன்னாரில் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதற்றமான சூழ்நிலைக்கு மத்தயிலும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மேற்கொண்டு தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகருக்குள் பல பாரிய வாகனங்களில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் வன வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் கொண்டுவரப்பட்டு கொண்டிருந்தது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக 55 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்ட குழு, மாவட்ட மக்கள் கத்தோலிக்கு அருட்தந்தையர்கள் உள்ளடங்களாக பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் என பல நூற்றுக்கணக்கானவர்களின் பாதுகாப்புடன் பல வாகனங்களில் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னார் நகருக்குள் கொண்டுவரப்பட்டது.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியை மறித்து போராட்டங்களை மேற்கொண்டனர். இதன் போது பெண் பொலிஸார் இல்லாத நிலையில் ஆண் பொலிஸார் பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.





