கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் கைது

பிரித்தானிய பெண்ணொருவர் சுமார் 46 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை கைதாகியுள்ளார்.
தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய குஷ் ரக போதைப்பொருள் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில், குறித்த பெண்ணை சோதனையிட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ருடு 405 இல் குறித்த பெண் பிற்பகல் 3.45 அளவில் நாட்டிற்கு வந்ததாக சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 46 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கடத்தப்பட்ட போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.