லிபியாவிற்கு 1.25 மில்லியன் டாலர் உதவிப் பொதியை வழங்க திட்டமிட்டுள்ள பிரித்தானிய அரசாங்கம்

டெர்னாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மில்லியன் பவுண்டுகள் ($1.25 மில்லியன்) மதிப்பிலான ஆரம்ப உதவிப் பொதியை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தங்குமிடம், சுகாதாரம் வசதிகள் உள்ளிட்ட மிக அவசர அடிப்படைத் தேவைகளை அடையாளம் காண, பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்”நாங்கள் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மற்றும் லிபிய அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்போம்,என்று இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கூறியுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)