குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகள் குறித்து பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
யூனிவர்சல் கிரெடிட்டில் உள்ள குடும்பங்கள் ஜூன் மாத இறுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பவுண்டுகளைப் அதிகமாக பெறலாம் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுனிவர்சல் கிரெடிட்டில் உள்ளவர்கள் ஜூன் 28 முதல் அதிகப்பட்ச குழந்தைப் பராமரிப்புக் கொடுப்பனவுகள் ஏறக்குறைய 50% அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுவதுடன், அரசாங்கம் அதிகமானவர்களை மீண்டும் வேலைக்குச் சேர்க்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இருந்து குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகளில் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் அதிகமாகக் கோர முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இதன்படி யுனிவர்சல் கிரெடிட் சிஸ்டம் மூலம் உதவி பெறத் தகுதியுள்ள பெற்றோர்கள் ஒரு குழந்தைக்கு £951 வரையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு £1,630 வரையும் திரும்பப் பெற முடியும். இது 47% அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஆதரவிற்குத் தகுதியுடைய பெற்றோர்கள் வேலைக்குச் செல்லவோ அல்லது கடனில் சிக்கியோருக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக, இது அமைந்துள்ளது.