இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை தொடர்பாக ராஜினாமா செய்த பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அதிகாரி
பயங்கரவாதத்திற்கு எதிராகப் பணியாற்றிய பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அதிகாரி ஒருவர் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்து அரசாங்கம் “போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மார்க் ஸ்மித் சக ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் , அவர் வெளியுறவு அலுவலகத்தில் “ஒவ்வொரு மட்டத்திலும்” கவலைகளை எழுப்பியதாகக் தெரிவித்தார்,
டப்ளினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரியும் ஸ்மித், அடிப்படை ஒப்புகைகளைத் தவிர வேறு எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கான மத்திய கிழக்கு ஆயுத ஏற்றுமதி உரிம மதிப்பீட்டில் தான் முன்னர் பணியாற்றியதாகவும், காஸாவில் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதற்கு “தெளிவான மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத எடுத்துக்காட்டுகளை” சக ஊழியர்கள் கண்டு வருவதாகவும் ஸ்மித் தெரிவித்தார்.