Site icon Tamil News

முதல் முறையாக இலங்கை வந்தார் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்!

இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் Anne-Marie Trevelyan இன்று இலங்கை வந்தடைந்ததாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடுவதைக் குறிக்கும் விதமாக அவர் இலங்கை வந்துள்ளார். இதன்போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நடத்தப்படும் இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (IORA) அமைச்சர்கள் கூட்டத்தில், இப்பிராந்தியத்திற்கான இங்கிலாந்தின் நீண்ட கால அர்ப்பணிப்பை அமைச்சர் ட்ரெவெலியன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்லுயிர் நோக்கங்கள் மற்றும் கிளாஸ்கோ ஒப்பந்தம் (COP26 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது) ஆகியவற்றின் மூலம் கூட்டுத் திட்டங்களின் மூலம், இலங்கையின் சுற்றுச்சூழல் பணிகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவை அமைச்சர் முன்னிலைப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கொழும்பில் இருக்கும் போது அமைச்சர் ட்ரெவெலியன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்

Exit mobile version