இங்கிலாந்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்த அலா அப்தெல் ஃபத்தா
எகிப்திய ஜனநாயக ஆர்வலர் அலா அப்தெல் ஃபத்தா (Alaa Abdel Fattah) இங்கிலாந்தில் குடியுரிமை பிரச்சனையில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
எகிப்திய சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட அலா அப்தெல் ஃபத்தா, தனது பழைய ட்வீட்களுக்கு மன்னிப்பு கோரி,
இங்கிலாந்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சில ட்வீட்கள் சமூக ஊடகங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தியதாகவும், அவரது குடியுரிமையை ரத்து செய்ய வேண்டிய கோரிக்கைகளை அதிகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்தெல் ஃபத்தா இரட்டை குடிமகன் என்பதால், சில சமூக ஊடகங்கள் மற்றும் மக்கள் அவரை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அழைப்புகளை விடுத்துள்ளனர்.
இதற்குப் பின்னர், டோரி மற்றும் சீர்திருத்தக் கட்சித் தலைவர்கள், அவரது குடியுரிமையை இரத்து செய்ய வேண்டுமா என்பதை உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் “எனது பழைய ட்வீட்கள் சிலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதற்காக சந்தேகமின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 12
ஆண்டுகளில் முதன்முறையாக என் குடும்பத்துடன் மீண்டும் இணைந்த போது, என் பதிவுகள் மீண்டும் வெளியிடப்பட்டு, என் நேர்மை மற்றும் மதிப்புகளை கேள்விக்குள்ளாக்கியது.”என அலா அப்தெல் ஃபத்தா (Alaa Abdel Fattah) தெரிவித்துள்ளார்.





