நைஜீரியாவில் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் கார் விபத்து – ஓட்டுநர் கைது
நைஜீரியாவில்(Nigeria) ஒரு பயங்கர விபத்தில் சிக்கிய பிரிட்டிஷ்(British) குத்துச்சண்டை வீரர் ஆந்தனி ஜோசுவா(Anthony Joshua) சென்ற காரின் ஓட்டுநர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
லாகோஸ் – இபாடன்(Lagos-Ibadan) அதிவேக நெடுஞ்சாலையின் மாகுன்(Makun) பகுதியில் அவர் பயணித்த லெக்ஸஸ்(Lexus) ரக சொகுசு கார் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது காரில் பயணித்த ஆந்தனி ஜோசுவாவின் இரண்டு நண்பர்களான லத்தீஃப் அயோடெல்(Latif Ayodele) மற்றும் சினா காமி(Sina Ghami) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆந்தனி ஜோசுவா விபத்து தொடர்பாக ஓட்டுநர் தற்போது காவலில் உள்ளார் என்று ஓகுன்(Ogun) மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒலுசேய் பாபசேய்(Oluseyi Babaseyi) குறிப்பிட்டுள்ளார்.




