காஸா மாணவர்களுக்காக பிரித்தானியா எடுத்த நடவடிக்கை
காஸா பகுதியில் இருந்து 40 மாணவர்களுக்கு பிரித்தானியாவில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில், பிரித்தானிய அரசாங்கத்தின் ஷெவெனிங் உதவித் தொகையைப் பெற்ற 9 பேருக்குப் பிரித்தானியாவில் ஒரு ஆண்டு முதுகலைப் படிப்புக்காக நேரடி உதவி வழங்குகிறது.
மேலும், தனியார் உதவித் தொகைகளைப் பெற்ற 30 மாணவர்களுக்கு உதவ, பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு பிறகு, காஸாவிலிருந்து பிரித்தானியாவுக்கு படிப்புக்காக செல்லும் முதல் குழுவாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.
எனினும், இஸ்ரேலின் அனுமதி இல்லாமல் காஸாவிலிருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலை தொடர்கிறது.
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கப் பிரித்தானியா எடுத்த முடிவைத் தொடர்ந்து, இஸ்ரேலுடன் அதன் உறவு மேலும் பதற்றமாகியுள்ளது.





