உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியா!
உக்ரைனுக்கு தேவையான வெடிமருந்து உதவிகளை வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது.
உக்ரைன் கடுமையான ஆயுத பற்றாக்குறையுடன் போராடும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதன்படி £245m வெடிமருந்துகளை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதித் தொகுப்பில் பீரங்கி, ஏவுகணை, டாங்கிகள் என்பனவும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை UK-ஐ தளமாகக் கொண்ட Cook Defense Systems ஆகியவற்றுக்கு இடையே புதிய பல மில்லியன் பவுண்டுகள் தொடர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் மூலம் உக்ரைனின் படைகள் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் கண்ணிவெடிகளால் சேதமடைந்த வாகனங்களை மீட்கவும், முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“சர்வதேச சமூகத்தின் ஆதரவின்றி அவர்களால் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியாது – அதனால்தான் உக்ரைன் தொடர்ந்து வெற்றியை நோக்கிப் போராடுவதை உறுதிசெய்ய தேவையானதை நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்” என்று பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.