பாலஸ்தீனிய மக்களுக்கு 20 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் பிரித்தானியா!
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பாலஸ்தீன மக்கள் பாரிய அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் இவர்களுக்கு ஆதரவாக குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. பல நாடுகள் அப்பாவி மக்கள் தாக்கப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உதவி தொகுப்புகளையும் அறிவித்துள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. இதன்படி ரஃபா எல்லை வழியாக முதற்கட்ட உதவி அம்மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.
இதற்கமைய தற்போது பிரித்தானியாவும் மேலதிகமாக 20 மில்லியன் பவுண்டுகளை பாலஸ்தீனிய மக்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி தொகுப்பை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்று (23.10) அறிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)