ரஷ்யாவின் 300 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த பிரித்தானியா!
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ரஷ்யாவின் 300 நிறுவனங்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்தத் தடைகள் ரஷ்யாவின் முக்கியமான நிதி, இராணுவ உபகரணங்கள் மற்றும் வருவாய் ஓட்டங்களை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைக் கொண்டு செல்லும் டிரான்ஸ்நெஃப்ட் (Transneft) மற்றும் ரஷ்யாவின் ‘நிழல் கடற்படையின்’ ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்ட 48 எண்ணெய் டேங்கர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்துவதாக அரசாங்கம் கூறுகிறது.
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் எரிசக்தி ஏற்றுமதி வருவாய் 27 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.





