ஐரோப்பா செய்தி

இஸ்ரேலை பாதுகாக்க போர் விமானங்களை களமிறக்கியது பிரித்தானியா

ஈரானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து தாக்கும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பிரித்தானிய போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய அரச இராணுவத்திற்கு சொந்தமான ஜெட் விமானங்கள் இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

குறித்த வான்வெளியில் பாதுகாப்புக்காக ஜெட் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரச இராணுவம் அறிவித்துள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

நேற்று (13) மற்றும் இன்று (14) காலை ஈரான் பல வான்வழி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!