பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸுக்கு சிறை தண்டனை!
பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அல்வ்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தானாக முன்வந்து நடந்ததாக அல்வஸ் கூறினார்.
ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை, அவருக்கு 4 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு $163,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.





