அமெரிக்க வரி குறைப்பில் நம்பிக்கை – பிரேசில் கோப்பி உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

அமெரிக்காவுடன் நடைபெறும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில், வருகிற ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 50% வரி குறித்த தீர்வில் நல்ல மாற்றம் கிடைக்கும் என பிரேசில் கோப்பி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகின் முன்னணி கோப்பி உற்பத்தியுநாடாக விளங்கும் பிரேசிலிலிருந்து, ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் 60 கிலோ எடையுடைய கோப்பி மூட்டைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது அமெரிக்காவில் நுகரிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு காபி பிரேசிலிலிருந்ததே ஆகும்.
புதிய வரி விதிப்பு அமலானால், பிரேசிலிய கோப்பி சந்தையில் போட்டி திறனை இழக்க நேரிடும் என்பதைக் குறித்து உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், விரைவாக தீர்வுக்கு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்படாத பட்சத்தில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலின் பொருளாதாரத்திலும் விவசாயத் துறையிலும் கோப்பி முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே, வரி கட்டணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசியல் மட்டிலும், வர்த்தக மட்டிலும் முக்கியத்துவம் பெறும் நிலையில் உள்ளன.