அமெரிக்க வரி பதிலடியை மதிப்பிடுவதற்கான முறையான செயல்முறையை தொடங்கியுள்ள பிரேசில்

அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட வர்த்தக எதிர்ப்பு அம்சங்கள் தொடர்பான யோசனையில் பிரேசில் தீவிரமாக இறங்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த வரிக்குப் பதில் நடவடிக்கை எடுப்பதும் அந்த அம்சங்களில் அடங்கும்.
பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருள்களுக்கு டிரம்ப் 50% வரி விதித்து உள்ளார். அந்த புதிய வரி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடப்புக்கு வந்தது. பிரேசிலின் காப்பி உள்ளிட்ட பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரியை வசூலிக்கத் தொடங்கிவிட்டது.
அதற்குப் பதிலடி தரும் விதமாக, அமெரிக்காவில் இருந்து பிரேசிலுக்குக் கொண்டு வரப்படும் பொருள்களுக்கு 50% வரி விதிப்பது பற்றி பிரேசில் பரிசீலிக்கிறது.
அது குறித்து ஆராய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா அனுமதி அளித்து உள்ளதாக அரசாங்கத் தரப்புகள் தெரிவித்தன.
டிரம்ப்பின் வரிவிதிப்புக்குப் பதிலடி தரும் விதமாக அமெரிக்கப் பொருள்களுக்கான வரியை உயர்த்துவது பற்றி பிரேசிலிய அரசாங்கம் ஆராயத் தொடங்கி உள்ளது.
பொருளியல் எதிரெதிர் சட்டத்தை பிரேசில் கொண்டுள்ளது. டிரம்ப்பின் வரிவிதிப்பு அந்தச் சட்டத்தின்கீழ் வருகிறதா என்பதை பிரேசிலிய வர்த்தக, தொழில் அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
30 நாள்களுக்குள் அது தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும்