உலகம் செய்தி

தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன்

பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர்.

பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து அவர்களது மகள் குறித்த முறைப்பாட்டில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார்.

அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார்.

வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை.

இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள்.

ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார்.

முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார்.

ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார்.

இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

(Visited 32 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி