ஜெர்மனிக்கு 20,000 யானைகளை அனுப்பப்போவதாக கடும் மிரட்டல்
ஜெர்மனிக்கு 20,000 யானைகளை அனுப்பப்போவதாக போட்ஸ்வானா ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார்.
அரசியல் மோதல் காரணமாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெருமைக்காக காட்டு விலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கைகளுக்கு கடுமையான வரம்புகள் இருக்க வேண்டும் என ஜெர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பரிந்துரைத்தது.
ஆனால் இந்த நடவடிக்கையானது போட்ஸ்வானா மக்களை வறுமையில் தள்ளும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி Mokgweetsi Masisi வாதிட்டிருந்தார்.
மேலும், வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளின் விளைவாக யானைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்டையாடுவதால் மட்டுமே, அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலங்குகளுடன் ஜெர்மன் மக்கள் வாழ்ந்து பார்த்துவிட்டு, எங்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்றும் ஜனாதிபதி Mokgweetsi Masisi குறிப்பிட்டிருந்தார்.
உலகில் உள்ள யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானா நாட்டில் உள்ளது.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில், 130,000 யானைகள் போட்ஸ்வானா நாட்டில் வாழ்கிறது. மேலும், யானைகளால் சொத்துக்களுக்கு சேதம், விளை நிலங்கள் பாதிக்கப்படவும் காரணமாக உள்ளது.