போண்டி கடற்கரை நாயகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
போண்டி கடற்கரை தாக்குதலின் போது துப்பாக்கிதாரியைத் தடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, காயங்கள் தீவிரமடைந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 14 தாக்குதலில் மார்பு மற்றும் கையில் காயமடைந்த இவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
“மற்றொரு மனிதன் இறப்பதைத் தடுப்பதே எனது குறிக்கோள், நான் மரணத்திற்கு அஞ்சவில்லை” என அகமது உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த மிக மோசமான இந்த துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் கொல்லப்பட்ட நிலையில் அகமதுவின் துணிச்சலான செயல் பல உயிர்களைக் காத்தது குறிப்பிடத்தக்கது





