கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறையினர் குவிப்பு!
கண்டி மாவட்ட செயலகக் கட்டடத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சிறப்புத் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்புப் படையினர் சோதனை நடத்தி வளாகத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி மாவட்டச் செயலகக் கட்டடத்திற்குள் வெடிபொருள் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு அநாமதேய மின்னஞ்சல் செய்தி வந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.





