பிரான்ஸ் விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் : அச்சத்தில் பயணிகள்!
பிரான்சின் பாரிஸில் உள்ள விமான நிலையத்தின் ஒரு பகுதி கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக பொய் தகவல் பரப்பப்பட்டதை தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரான்சில் உள்ள Paris-Orly விமான நிலையத்தின் இரண்டு மற்றும் மூன்று முனையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
“விமான நிலைய கழிவறைகளில் வெடிகுண்டு வைத்ததாக நபர் ஒருவர் அழைப்பேற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அழைப்பை தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 35 times, 1 visits today)





