இந்தியா செய்தி

வெடி குண்டு மிரட்டல் – டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகள் திடீரென மூடல்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள 100க்கும் மேற்பட்ட  பாடசாலைகள் இன்று காலை திடீரென மூடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிகுண்டுகள் இருப்பதாக மின்னஞ்சல் ஊடாக செய்தி வந்ததால், உடனடியாக ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பாடசாலைகள் மட்டுமின்றி டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இந்த மின்னஞ்சல் செய்திகள் வந்திருந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

மோப்ப நாய் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள் மற்றும் தீயணைப்பு சேவைகளை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அதிகாரிகள் குண்டு எதையும் கண்டுபிடிக்கவில்லை, பின்னர் இந்திய அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று கூறினார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!