ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல் – வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்
ஜெமனியின் பொது ஒலிபரப்பான ZDFக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேற்கு நகரமான Mainz இல் உள்ள பல கட்டிடங்களை ஜேர்மன் பொலிசார் திங்களன்று சுற்றிவளைத்த நிலையில் அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்யியுள்ளனர்.
மெயின்ஸில் உள்ள ZDF ஸ்டுடியோவிற்கு எதிராக காலை 08:20 மணியளவில் மிரட்டல் வந்ததாக பொலிசார் தெரிவித்தனர். “வளாகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் பிற நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டன என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வெடிபொருட்களைக் கண்டறிய பயிற்சியளிக்கப்பட்ட சேவை நாய்களின் உதவியுடன் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 600 ZDF ஊழியர்கள் ZDF வளாகத்தை விட்டு வெளியேறுமாறுடி கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் DPA தெரிவித்துள்ளது.