ஐரோப்பா

(BREAKING NEWS) சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து – பலர் பலியானதாக தகவல்!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஸ்கை ரிசார்ட் பாரில் ஏற்பட்ட வெடி விபத்தில்  பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana)  உள்ள  பாரில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 00.30 மணிக்கு) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறான பொருள் வெடித்தது என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. சுவிஸ் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் ஒரு கட்டடம் தீப்பிடித்து எரிவதை மட்டுமே காட்டுகிறது.

சம்பவ இடத்திற்கு அவசரகால குழுக்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள்…..!

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!