இங்கிலாந்தில் உயிருள்ள நண்டுகளை வேகவைப்பதற்கு தடை!
இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விலங்கு நல உத்தியின் ஒரு பகுதியாக, உயிருள்ள நண்டுகளை வேகவைப்பதைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது.
டெகாபாட் ஓட்டுமீன்கள் (decapod) மற்றும் செபலோபாட் மொல்லஸ்க்குகளை (cephalopod molluscs) வலி மற்றும் துன்பத்தை அனுபவிக்கும் திறன் கொண்ட உணர்வுள்ள உயிரினங்களாக அங்கீகரித்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் குறித்த நடவடிக்கையை பல விலங்குநல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
சுற்றுச்சூழல் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) இந்த உத்தியை ஒரு தலைமுறையில் மிகவும் லட்சியமானது என்று விவரித்துள்ளார்.




